இரண்டு வருட காலமாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதிருந்த நாட்டை ஒன்றிணைப்பதாக இஸ்ரேலின் புதிய பிரதமர் நப்தாலி பென்னட் அறிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் மக்கள் நலன்களைக் கருத்திற்கொண்டதாக இருக்கும் என்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரேலின் புதிய பிரதமர் அறிவித்துள்ளார்.
புதிய பிரதமராக பதவியேற்ற நப்தாலி பென்னர், ‘இது துக்க தினமல்ல. ஜனநாயக ரீதியான அரசாங்க மாற்றம் ஆகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எம்மால் முடியுமான அனைத்தையும் செய்வோம்.
இன்று இரவு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோருக்கு, அடுத்த தரப்பினரின் துன்பத்தைக் கண்டு, நடனமாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் எதிரிகள் அல்ல. நாம் ஒரே மக்கள்’ என்று புதிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் நப்தாலியை கை குழுக்கி வாழ்த்திய பெஞ்சமின் நெதன்யாகு, ‘நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.