முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட உடையார்க்கட்டு இருட்டு மடு கிராமத்தில், மாங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் மா மரத்திலிருந்து தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வெள்ளையன் சண்முகநாதன் என்ற 51 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தவிபத்து கடந்த 10ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.