இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதும் அது தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எரிபொருள் விலையாகவே உள்ளதாக மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரித்த பிறகும், இலங்கை தெற்காசியாவில் மிகக் குறைந்த எரிபொருள் விலையைக் கொண்டுள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜூன் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல வாத பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.