திங்கட்கிழமை, 14 ஜூன் 2021
வைகாசி 31
சதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்
நல்ல நேரம் காலை: 6:00AM – 7:00AM
இராகுகாலம் காலை: 7:30AM – 9:00AM
குளிகை பகல் 1:30PM 3:00PM
எமகண்டம் காலை: 10:30AM – 12:00AM
மேஷம்
குடும்பச்சுமை கூடும் நாள்.உறவினர் வழியில் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். பத்திரப்பதிவில்கவனம் தேவை . நிதானத்துடன் செயல்படுவது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
ரிஷபம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்கைளச் சாதித்துக்க கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து நல்லசெய்திகள் வந்து சேரும்.
மிதுனம்
கடன்சுமை குறையும் நாள். நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்கள இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோக மாற்றங்கள் உருவாகும்.
கடகம்
இல்லம்தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு. புதிய தொழிலைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்டநாளைய எண்ணம் நிறைவேறும்.
சிம்மம்
கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமை ப்பதில் அக்கறை ஏற்படும். வாகனப் பழுதுச்செலவு உண்டு.
கன்னி
நட்பு வட்டம் விரிவடையும் நாள். செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். பக்கத்து வீட்டாரின் பாசமழையில் நனைவீர்கள்.
துலாம்
சேமிப்பு உயரும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வீடு, இடம் வாங்கப் போட்ட திட்டங்கள் நிறை வேறும். மற்றவர்கள் வியக்குமளவுக்கு செயல் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
பணவரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக நண்பர்கள் இருப்பர். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும்.
தனுசு
மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை உருவாகலாம்.
மகரம்
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும்.
கும்பம்
அந்தஸ்து உயரும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உங்களின் திறமைக்கு பாராட்டுகள் கிடைக்கும். உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் மூலம் ஒரு நல்ல சம்பவம் நடைபெறும்.
மீனம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வாங்கல்-கொடுக்கல்கள் திருப்தி தரும். வாகனம் புதிதாக வாங்குவது பற்றி யோசிப்பீர்கள்.