வெலிகம பகுதிக்கு அருகில் படகுகளில் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
எரிபொருள் சிலிண்டர்கள் மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்டு ஹெரோயின் தொகை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.