கொழும்பு வெள்ளவத்தையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் 68 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்றும் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்
குறிப்பாக வெள்ளவத்தை பரகும்பா மாவத்தையிலுள்ள தொடர்மாடியொன்றில் பல நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்மாடியில் 100க்கும் அதிகமானவர்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அதில் பெரும்பாலானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பரகும்பா மாவத்தையும், அதனையடுத்துள்ள சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.