யாழ்.மாவட்டத்தில் 86 பேர் உட்பட வடக்கில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரதுறை தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 544 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேருக்கும், யாழ்.மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 பேருக்கும், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், கிளிநொச்சி – உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்குமாக 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.