தம்மை விடுதலை செய்ய வேண்டும், இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் எனக் கோரி, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று நான்காவது நாளாகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் போராட்டக்காரர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி ஊடாக பேசியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேசுவதாகவும் அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.