ஓய்வு பெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலமாக, இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என்று வெளியாகியுள்ள தகவல்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் நான்சி வான் ஹோர்ன்,
“இந்த ஆதாரமற்ற செய்திகள், உண்மைகளல்ல. இவை உண்மை சரிபார்ப்புகளைப் பொருட்படுத்தாமல் எழுதப்பட்டுள்ளன.
சர்வதேச வானூர்தி நிலையங்கள் வழியாக யார் நாட்டிற்கு வருகிறார்கள் என்பது சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு நடக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் திட்டங்களை அரசு சாரா நிறுவனங்கள்முன்னெடுக்கின்ற அதேவேளை, சிறிலங்காவின் இறையாண்மையையும் மதிக்கின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.