ஜூன் 21-ம் திகதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 21-ம் திகதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. ஜனநாயக முறைப்படி சட்டசபை கூட்டம் நடைபெறும்.
அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்பட்டு, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என முடிவு செய்யப்படும், கூட்டத்தில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ,அலுவலர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.