சுன்னாகத்தில் திருட்டில் ஈடுபட்ட நல்லூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலணி பகுதியில் இலங்கை மின்சார சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டு ஜன்னலை உடைத்து உட்புகுந்து வீட்டில் இருந்த இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா பணமும் திருடப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது
திருட்டு சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டரை பவுண் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபா பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.