இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் யூரி பி. மேட்டரி, கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் கொரோனா தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
அதற்கமைய ஜெனரல் ஷவேந்திர சில்வா கொரோனா தொற்றின் நிலைமை, தடுப்பூசி, தனிமைப்படுத்தல் மையங்களின் நிலமைகள், பயணக் கட்டுப்பாடுகள், கொரோனா நோய் தொற்றை கண்டறிதல் தொடர்பான விவரங்களையும் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சவாலை நோக்கி செல்லும் மூலோபாய மற்றும் குறிப்பிட்ட அணுகுமுறையை விளக்கினார்.
மேலும், இடை நிலை பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் நடவடிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் மேற் கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி திட்டங்கள் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.