பாகிஸ்தானில் இரண்டு விரைவு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்துமாறு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று சயித் எக்ஸ்பிரஸ், மிலத் எக்ஸ்பிரஸ் ஆகிய பயணிகள் தொடருந்துகள், தடம் புரண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மோசமான தொடருந்து விபத்தாக இது கருதப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.