மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
தொற்றுநீக்கி மற்றும் இரசாயனப் பொருட்கள் தயாரிக்கப்படும், நிறுவனத்தில் 37 பேர் பணியில் இருந்துள்ளனர். இங்கு இன்று தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் 6 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தொழிற்சாலையில் தீவிபத்தில் சிக்கிய 7 பேர் பலியான நிலையில், 21 பேரை தீயணைப்புப் பிரிவினர் மீட்டிருந்தனர். ஏனைய 10 பேர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களும் உயிரிழந்து விட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.