மேஷம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
ரிஷபம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். தைரியத் தோடும், தன்னம்பிக்கை யோடும் செயல்படுவீர்கள்.
மிதுனம்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். வரவை விடச் செலவு கூடும். திருமணப் பேச்சுகள் முடிவடையாமல் தாமதப்படும். உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கடகம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரா்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். எதிரிகள் விலகுவர். திருமணத் தடை அகலும். சொத்து விற்பனையில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
சிம்மம்
சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
கன்னி
பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லா திருப்பபது நல்லது.
துலாம்
பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த ஒரு முயற்சி இப்பொழுது பெற்றி பெறும்.
விருச்சிகம்
தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தொழில் வளர்ச்சிக்கு வி.ஐ.பி.க்களின் உதவி கிட்டும்.
தனுசு
சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறை வேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.
மகரம்
உற்சாகமும், சோர்வும் உடனுக்குடன் வந்து சேரும் நாள். அலுவலகப்பணிகளில் தாமதம் ஏற்படும். பணம் பைக்கு வந்த நிமிடங்களிலேயே செலவாகும். தொழில் முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம்.
கும்பம்
போராடும் குணத்தை விட்டுப் புதுமை படைக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். நட்பால் நன்மை உண்டு. மக்கள் செல்வங்களுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம். உடல் நலன் சீராகும்.
மீனம்
புகழ் மிக்கவர்களின் உதவியால் புதிய பாதை அமையும் நாள். ஒப்பந்தங்கள் வந்து சேரும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணிகளைத் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.