பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை, இன்று நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்திலும், நாளை நடைபெற உள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைத்து வர வேண்டுமென, பாராளுமன்ற படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, சி.ஐ.டியின் பணிப்பாளருக்குக் கடிதமூடாக அறிவித்துள்ளார்.
ரிஷாட் பதியூதினின் கோரிக்கைக்கு ஏற்ப அவரை சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும், பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் நுழைவாயில் வரையில் ரிஷாட்டை சி.ஐ.டியினர் அழைத்து வந்து, அதன் பின்னர் பாராளுமன்ற பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், பாராளுமன்றத்துக்குள் ரிஷாட்டை பாராளுமன்ற பொலிஸாரே அழைத்து வருவார்களெனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.