தமிழக அரசினால் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அறிவிக்கப்பட்ட உலகளாவிய கேள்விப் பத்திரங்களுக்கு எந்த நிறுவனமும், விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால், உலகளாவிய கேள்விப்பத்திரம் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்கு, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் உலகளாவிய கேள்விப்பத்திரம் கடந்த 12-ஆம் திகதி கோரப்பட்டிருந்தன. ஜூன் 5-ம் திகதி வரை இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நிறுவனம் கூட கேள்விப்பத்திரம் கோரவில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.