தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், ‛தி பேமிலி மேன்-2′ இணையத் தொடர், அமேசான் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, இதற்கு எதிராக கடுமையான கருத்துக்கள் வெளியாகி வருவதால் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் முன்னிலை பெற்றுள்ளது. ‘தி பேமிலி மேன் – 2’ இணையத் தொடரின் முன்னோட்டம், வெளியான நாள் முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கும், இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி உட்பட பல தமிழ் அமைப்புகள் குரல் எழுப்பியிருந்தன. எதிர்ப்புக்கு மத்தியிலும், இணையத்தில் இந்த தொடர் வெளியிடப்பட்டுள்ளமை பலருக்கும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2′ இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் அனைத்து அமேசான் சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம்,’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.