(வடமராட்சி நிருபர்)
பருத்தித்துறையைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது 102 ஆவது வயதில் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
தும்பளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசா அண்ணை என அழைக்கப்படும் சின்னக்குட்டி இராசரத்தினம் என்பவரே 102 ஆவது வயதில் காலமானவராவர்.
102 வயதாக இருந்தாலும் இவர் தன்னுடைய தேவைகளை தானே செய்து வந்ததாகவும் உடல் ஆரோக்கியம் மிக்கவராக இருந்துள்ளார் எனவும் இறப்பதற்கு முன்னர் கூட துவிச்சக்கர வண்டி செலுத்தி வந்ததாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.