மேஷம்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். அச்சுறுத்தல்கள் அகன்று ஆனந்தம் கூடும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்தி தரும்.
ரிஷபம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
மிதுனம்
கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். எதிர்பார்த்தபடியே வரவு வந்து சேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கடகம்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். கைமாற்றுக் கொடுத்த பணம் கைக்கு வந்து சேரலாம். பல நாட்களாக செய்ய நினைத்த காரிய மொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். பகையானவர்கள் நட்பாவர்.
சிம்மம்
பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்து விற்பனையால் கணிசமான லாபம் உண்டு. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கன்னி
நிம்மதி கிடைக்க நிதானத்தைக்கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலம் பற்றிய கவலை உருவாகலாம். உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
துலாம்
எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் வந்து சேரலாம்.
விருச்சிகம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசைகேட்பதற்கான அறிகுறி தென்படும்.
தனுசு
எதிர்பாராத வரவால் இதயம் மகிழும் நாள். சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. செயல்பாடுகளில் அவசரத்தை தவிர்ப்பது நல்லது.
மகரம்
விரயங்கள் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படலாம். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் தாமதம் ஏற்படும். தன்னம்பிக்கையைத் தளரவிட வேண்டாம்.
கும்பம்
குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்று சிந்திப்பீர்கள். செவிகுளிரும் செய்திகள் காலை நேரத்தில் வந்து சேரும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரலாம்.
மீனம்
வரவு திருப்தி தரும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெடுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வீடு கட்டும் பணிக்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வீர்கள்.