(வடமராட்சி நிருபர்)
இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் உப சபாநாயகரும் முன்னாள் உடுப்பிட்டி நல்லூர்த்தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 19 ஆவது நினைவு தினத்தை ஒட்டி நெல்லியடி பஸ் நிலையத்திலும் அன்னாரின் கரவெட்டி இல்லத்திலும்அமைந்துள்ள உருவச்சிலைகளுக்கு தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி மலர்மாலை அணிவித்து நினைவுகூரும் நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை (05.06.2021) காலை 9 மணிக்கு நடைபெற்றன.
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நெல்லியடியில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு முன்னாள் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் ஒன்றியத்த தலைவர் உபாலி பொன்னம்பலம் உபதலைவர் இ.இராகவன் ஆகியோர தீபம் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்வுக்கு கொரொனா தொற்றுக் காரணமாக மூவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து அமரர் சிவாவின் கரவெட்டி இல்லத்திலும் அமைந்துள்ள சிலைக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் உபதலைவர் அரவிந்தன் சிவாவுக்கு இறுதிவரை துணையாக இருந்த தங்க முகுந்தன் சிவாவின் நெருங்கிய ஆதரவாளரான சி.சிதம்பரநாதன் ஆகியோர் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு தீபம் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.


