கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவசர உதவிப்பொருட்கள் இலங்கை வந்தடைந்துள்ளன.
கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம், தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான USAID இன் ஊடாக விமானங்களில் உதவிகளை அனுப்புவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்த தொகுதியில் 880,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், 1,200 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் மற்றும் 200 செயற்கை சுவாசக்கருவிகளை முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவும் வகையில் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.