பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
www.mahindarajapaksa.lk என்ற இணையத்தளம் மீதே, இணையவழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த இணையத்தளம் முடக்கப்பட்டதாகவும், மஹிந்த ராஜபக்ஷவின் இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்கும் போது, வேறொரு முகவரிக்குள் பிரவேசிக்கும் வகையில் வழிகாட்டல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், தற்போது, பிரதமரின் இணையத்தளம் மீண்டும் வழமைபோல செயற்படத் தொடங்கியுள்ளது.