சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ (Pakvac) தடுப்பூசியின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான், முதல் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.