மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தான் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் 25 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு, (03/06) அதிகாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட து.
இதையடுத்து, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தமை தெரியவந்தது.
ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவில் விழுங்கியமையே அவரது உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மட்டகளப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்றுள்ளது