மேஷம்
பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்களை வாங்க திட்டம் தீட்டுவீர்கள்.
ரிஷபம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வெளிநாட்டுத் தொடர்பு நலம் பயக்கும். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்புடன் வீட்டுப் பிரச்சினைகளைத்தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோக அனுகூலம் உண்டு.
கடகம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
மிதுனம்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது யோசிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கன்னி
அன்பு நண்பர்களின் ஆதரவால் ஆனந்தம் பெருகும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. பக்கத்து வீட்டாரின் பகை மாறும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
துலாம்
கடமை உணர்வோடு செயல்பட்டுக் காரியங்களைச் செய்து முடிக்கும் நாள். புதிய பொறுப்புகள் உங்களை நாடி வரும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த புது முயற்சி பலன் தரும். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.
மகரம்
பணவரவு திருப்தி தரும் நாள். பாசம் மிக்கவர்கள் நேசக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றத்திற்கு உதவிய சிலரை தொலை பேசி மூலம் தொடர்பு கொள்வீர்கள். உறவினர்கள் உதவி கிடைக்கும்.
கும்பம்
சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதிக்கும் நாள். தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் தீரும்.
மீனம்
மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் தோன்றிய எதிர்ப்புகள் கடைசி நேரத்தில் சாதகமாக முடியும்.