கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது.
கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
கப்பலின் பின்பகுதி இன்று மாலை 3 மணியளவில் தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார்.
எனினும், கப்பலின் முன்பகுதி தொடர்ந்தும் மிதந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
கப்பலின் கொள்கலன்களை ஏற்றிய பகுதியில் தொடர்ந்தும் புகை வௌியேறுவதாகவும் அன்ரு லிஹீ கூறினார்.
இதனிடையே, கப்பலினால் கடலில் கலந்துள்ள இரசாயனப் பொருட்கள் காரணமாக கடல் நீரி PH அளவில் மாற்றம் ஏற்படவில்லையென நாரா நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சமுத்திரிக்கா கப்பல் மூலம் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றிய இடத்திற்கு சென்று மாதிரிகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித்த கித்சிறி கூறிளனார்.