கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான சுற்று நிரூபம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஏதேனும் உடல் நிலை பாதிப்புக்கள் காணப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இதுவரை 7 கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
களுபோவில வைத்தியசாலையில் நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் விசேட வைத்தியர் டொக்டர் சித்திரமாலி டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக கர்ப்பிணித் தாய்மார்கள் அவசரப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு வர வேண்டாம் என விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவிக்கின்றார்.
அதற்கான அறிவிப்பு கர்ப்பிணித் தாய்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.