இலங்கையில் பதிவு திருமணங்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது திருமண பதிவு சட்டத்தின் அடிப்படையில் இம்மாதம் முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதிவாளர் அலுவலகம் அல்லது வெளி இடங்களில் விவாக பதிவு செய்வதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்ற திருமணத்துக்கான கட்டணம் 750 ரூபாவில் இருந்து 900 ரூபாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
விவாகப் பதிவுக்கான பதிவாளர் உறுதிச்சான்றை வழங்குவதற்கான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் உள்ளிட்ட கண்டி சட்ட திருமணங்களுக்கான பதிவு கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.