மேஷம்
தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய வேண்டிய நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.
ரிஷபம்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். பிள்ைளகள் வழியில் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
செல்வாக்கு மேலோங்கும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய பணவரவுகள் வந்து சேரலாம்.
கடகம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோரின் எண்ணிக்கை உயரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூா்த்தி செய்ய இயலாது. தவிர்க்க முடியாத விரயத்தால் தடுமாற்றம் ஏற்படும்.
சிம்மம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். திடீர் வரவு உண்டு. எதை எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ, அந்தக் காரியம் முடிவடையும். தொழில் நலன் கருதி புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.
கன்னி
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் ஏற்படும். உற்றார், உறவினர்கள் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழ்வீர்கள்.
துலாம்
ஆரோக்கியம் சீராகும் நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதர சச்சரவுகள் மாறும். இழுபறியாக இருந்த வேலைகளை துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்
கனவுகள் நனவாகும் நாள். காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் ஏற்படும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
தனுசு
கவலைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு நேற்றைய பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். சகோதர வழியில் சந்தோஷம் தரும் செய்தியொன்று வந்து சேரும். விரயத்திற்கேற்ற வரவு உண்டு.
மகரம்
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். நீண்ட நாளாக நிறை வேறாத காரியமொன்று இன்று நிறை வேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
விவகாரம் செய்தவர்கள் விலகிச்செல்லும் நாள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும்.
மீனம்
பணிபுரியுமிடத்தில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள். சகோதரர்களால் நன்மை கிட்டும். எதிர்பார்க்காமல் செய்த காரிய மொன்றில் லாபம் கிடைக்கலாம். பூமி விற்பனையில் ஆர்வம் காட்டுவீர்கள்.