இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 648 பேர் தோற்றுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளதோடு கிளிநொச்சி மாவட்டத்தில் தோற்றினால் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்துள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் என். சரவணபவன் அவர்களின் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 2069 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்கள். சித்திரை வருடப் பிறப்பிற்கு பின்னரான காலப்பகுதியில் கொரோனா தோற்றுக்கள் அதிகமாக காணப்பட்டாலும் ஓரளவில் எம்மால் கட்டுப்படுத்தக் கூடிய அளவு காணப்படுகின்றது. என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் பாம்பு கடி மற்றும் விஷ ஜந்துக்கள் தீண்டினால் அதற்கான மருந்துகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் ககுறைவாகவே காணப்படுகின்றமையினால் மக்களை மிகவும் அவதானத்துடன் செல்லும்படி மிகவும் அவதானத்துடன் இருக்கும்படி தெரிவித்துள்ளார்.