யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் இன்று தொடக்கம் ஒரு மாதத்திற்கு பகுதி பகுதியாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்
இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை புதன்கிழமையும் யாழ்.மாவட்டத்தில் இளவாலை, மாரீசன்கூடல், மெய்கண்டான், பெரியவிளான், சேந்தன்குளம் ஆகிய பகுதிகளில் முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அதே காலப்பகுதியில் வவுனியாவில் ஒக்போபுர, கொக்கெலிய, மகாமயிலங்குளம், நொச்சிமோட்டை, பரன்னாட்டன்கல், ஓமந்தை, புதியசின்னக்குளம், சமணங்குளம், சாந்தசோலை, தரணிக்குளம் ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.