மேஷம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். தொழில் ரீதியாக எடுத்த முடிவில் குழப்பங்கள் ஏற்படும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும்.
ரிஷபம்
எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காணும் நாள். கடன் சுமைகளைக் குறைக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரவு திருப்தி தரும்.
மிதுனம்
புகழ்ச்சிக்கு மயங்கி பொருள் இழப்பு ஏற்படும் நாள். அடுத்தவர் நலனுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். திடீர் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
கடகம்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் செய்வதற்கான அறிகுறி தோன்றும். சேமித்த பணத்தைத் திடீரெனச் செலவிட நேரிடும். மின்சாதனப் பழுதுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.
சிம்மம்
திறமை பளிச்சிடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறுவதற்கான அறிகுறி தோன்றும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரும். சொத்துத் தகராறுகள் முடிவிற்கு வரும்.
கன்னி
தன்னம்பிக்கையம், தைரியமும் அதிகரிக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். குடும்ப முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும்.
துலாம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பாராத தனலாபம் உண்டு. சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.
விருச்சிகம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பினும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. தொழில் முன்னேற்றம் உண்டு.
மகரம்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகைளப் பூர்த்தி செய்து கொள்ளவள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக முயற்சி கைகூடும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்
விடியும் பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள்.வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. கருத்து வேறுபாடுகள் அகலும்.
மீனம்
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்.