எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணியாளர்கள் கப்பலுக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில் தீவிபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்று (01) செவ்வாய்க்கிழமை காலை எண்ணெய் கசிவோ அல்லது தீச்சுவாலைகளோ காணப்படவில்லை.
கப்பலில் தீச்சுவாலை காணப்படாத போதிலும் சாம்பல் அல்லது வெள்ளை நிற புகை நடுப்பகுதியிலிருந்து தொடர்ந்து வெளியாகிறது. கப்பலின் எல்லைப் பரப்பை குளிரூட்டும் பணி தொடந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீயை அணைத்த பின்னர் மீட்பு பணியாளர்கள் கப்பலுக்குள் பிரவேசித்துள்ளனர். கப்பலில் மதிப்பீடுகள் நடைபெறுகின்றன என்றும் டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.