இலங்கைக்கு கூடுதல் விலைக்கு சினோபார்ம் தடுப்பு மருந்தை சீனா விற்பனை செய்துள்ளதாக சர்ச்சை இலங்கைஎழுந்துள்ளது.
சீனாவிடம் இருந்து 20 மில்லியன் சினோபார்ம் தடுப்பு மருந்துகளை தலா 15 டொலர் படி கொள்வனவு செய்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், பங்களாதேசுக்கு, 10 டொலருக்கு விற்கப்பட்ட சினோபார்ம் தடுப்பு மருந்தை, இலங்கைக்கு 15 டொலருக்கு விற்பனை செய்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள மருந்துப் பொருட்கள் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, பங்களாதேசுக்கு அவ்வாறு 10 டொலருக்கு சினோபார்ம் தடுப்பு மருந்து விற்கப்படவில்லை என்ற தெரிவித்துள்ளார்.
அவ்வாறு 10 டொலருக்கு பங்களாதேசுக்கு மருந்து வழங்கப்படவில்லை என்றும், அந்த கொள்வனவு உடன்பாடு இன்னமும் பேச்சுக்களில் உள்ளதாகவும், சீன தூதரகம் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பில் உள்ள சீன தூதரகம் இந்த விவகாரம் தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ளது.
அதில், “எல்லா மருந்து நிறுவனங்களுக்கும் வேறுபட்ட விலை வரம்பைக் கொண்டிருப்பது பொதுவான நடைமுறையாகும்.
இலங்கை விரைவான விநியோகத்துடன் சிறந்த நிறுவன விலையைப் பெற்றுள்ளது” என்றும் மட்டும் கூறப்பட்டுள்ளது.