மேஷம்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். தாராளமாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பிரிந்து சென்றவர்கள் வந்திணைவர். பிரச்சினைகளைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் நாட்டம் அதிகரிக்கும்.
மிதுனம்
வாழ்க்கைத் தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும் நாள். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவு பகையாகலாம். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் திகைப்பை உருவாக்கலாம்.
கடகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மணவாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தோர் ஒத்துழைப்புச் செய்வர். வீடு வாங்கும் யோகம் கைகூடும்.
சிம்மம்
அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் கிடைக்கும் நாள். மனத்தளவில் நினைத்த காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். முன்னோர் வழிச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.
கன்னி
நண்பர்களின் உதவி கிடைத்துமகிழும் நாள். குடும்பத்தினர்களின்தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுபச்செய்தி வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பு கிட்டும்.
துலாம்
விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். ஆதாயத்தை விட விரயங்களே அதிகரிக்கும். எண்ணங்களை நிறைவேற்ற இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
எடுத்த காரியங்கள் இனிதே வெற்றி பெறும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மகரம்
நல்ல காரியம் இல்லத்தில் நடை பெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். வியாபார முன்னேற்றம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாகும்.
மீனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிரபலமானவர்களின் நட்பால் பிரச்சினைகள் தீரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.