(க-சரவணன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் கீழ் உள்ள சுகதார வைத்திய அதிகாரி பிரிவுகளான மட்டக்களப்பில் 23 பேருக்கும் களுவாஞ்சிக்டியில் 19 பேருக்கும், வாழைச்சேனையில் 8 பேருக்கும், காத்தான்குடியில் 2 பேருக்கும், கோறளைப்பற்று மத்தியில் 2 பேருக்கும், ஓட்டுமாவடியில் 8 பேருக்கும், செங்கலடியில் 14 பேருக்கும், ஏறாவூரில் 25 பேருக்கும், வெல்லாவெளியில் 17 பேரக்கும் , ஆரையம்பதியில் 10 பேருக்கும், கிரானில் 10 பேருக்கும், விமானப்படைவீரர் ஒருவர் உட்பட 145 பேருக்கு தொற்று உறுதி இன்று திங்கட்கிழமை (31) கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்லுகின்றது எனவே பொதுமக்கள் பயணைத்தடையை மீறி வீட்டில் இருந்து தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தள்ளார்.