மேஷம்
அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பிரபலங்களின் ஒத்துழைப்பால் பெருமையடைவீர்கள்.
ரிஷபம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். அத்தியாவசியப்பொருட்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சிலவேலைகளை உங்கள் மேற்பார்வையில் செய்வதே நல்லது.
மிதுனம்
அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள். நிறைய விரயங்களைச் சந்திக்க நேரிடும். புதிய பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கும். வீடுமாற்றச் சிந்தனை மேலோங்கும்.
கடகம்
பாக்கிகள் வசூலாகும் நாள். பகை பாராட்டியவர்கள் உங்களோடு வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில்ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
கன்னி
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அனுபவஸ்தர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.
துலாம்
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
மற்றவர்களின் பாராட்டுகளைப்பெற்று மகிழ்ச்சி காணும் நாள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
தனுசு
அதிர்ஷ்டமான நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடும் பொழுது கவனம் தேவை. கடன் சுமை கொஞ்சம் குறையும். சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.கூடப்பிறந்தவர்களின் குரலுக்கு செவி சாய்ப்பீர்கள்.
கும்பம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பழைய பங்குதாரர்கள் மீண்டும் வந்திணையும் வாய்ப்பு உண்டு.
மீனம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். எதிரிகள் விலகுவர். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்பு நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.