கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக புதுடெல்லியில் உள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம், நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய அதிகாரிகள், இந்த திட்டத்தின் பாதுகாப்பு தாக்கங்கள் தொடர்பான தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறியுள்ளனர்.
இது ஒரு வணிக முயற்சி மட்டுமே என்றால், அது அவர்களின் தெரிவு என்று குறிப்பிட்டுள்ள இந்திய அதிகாரிகள், இந்தியாவின் தேசிய நலனைக் கவனத்தில் கொண்டு இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் வெளிப்படைத்தன்மை மற்றும் நிதிப் பொறுப்பு குறித்தும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
துறைமுக நகரம் சிறிலங்காவின் ஆள்புல ஒருமைப்பாட்டையும், சர்வதேச நியமங்களையும் மதிக்க வேண்டும் என்றும், இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : இந்து நாளிதழ்