முகநூலின் ஊடாகப் பரிசு வழங்குவதாக கூறி 4 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த வெளிநாட்டவரொருவர் அத்தியடி பிரதேசத்தில் வைத்து பேலியகொடை பொலிசாரினால் நேற்றைய முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரை கைது செய்யும் போது, அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.