யாழ்ப்பாணம் மாநகரசபைப் பிரதேசத்துக்கு உட்பட்ட நல்லூர் அரசடிப் பகுதியில் நேற்றைய தினமும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனால் அப்பிரதேசத்தில் உள்ளவர்களை முழுமையாக கொரோனாத் தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அரசடி இரண்டாம் ஒழுங்கையில் ஒருவருக்கு கொரோனா இனம் காணப்பட்டதனைத் தொடர்ந்து தற்போது தொடர்ச்சியாக அப்பகுதியில் பலருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளமை இனம் காணப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் அரசடி மற்றும் மணல்தறை குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள 21 பேருக்கு இதுவரை கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டமையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்துவதன் மூலமே உண்மை தெரியவரும் எனக் கூறப்படுகின்றது.
இப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தடுக்கப்பட்ட காலத்தில் உற்சவம் நடத்தியமையே பரவலிற்கான காரணம் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.