யாழ்.குருநகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிறந்து 24 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
3 நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்
குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.