பருத்தித்துறை, ஓடக்கரைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 15 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் ஓடக்கரைக் கிராமத்தில் 37 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
அவர்களில் 15 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓடக்கரைக் கிராமத்தில் அண்மைய நாள்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் இந்த விசேட பரிசோதனை அங்கு நேற்று முன்னெடுக்கப்பட்டது.