தபால் நிலையங்கள் அனைத்தும் இன்றும் நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திறந்திருக்கும் என்று தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் குறித்த இரு நாட்களிலும் தபால் நிலையங்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு, விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.