திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த இருவரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து வெடிபொருடகள் மீட்டகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்பவதினமான நேற்று இரவு திருகோணமலை இறக்கக்கண்டி பிரதேசத்தில் குறித்த வீட்டை வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முற்றுகையிட்டனர் இதன்போது அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த 85 லெலைனைற் குச்சிகள் சேவா நூல் என்பவற்றை மீட்டதுடன் இருவரை கைது செய்தனர்
இதில் நிலாவெளியைச் சேர்ந்த 39 வயதுடையவரும் இறக்கக்கண்டியைச் சேர்ந்த 34 வயதுடையவர்களான இருவரை சந்தேகத்தில் கைது செய்தனர். இவர்கள் என்ன நோக்கத்துக்காக எங்கிருந்து இவ்வெடி மருந்துகள் கொண்டு வரப்பட்டன என்பன தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.