விசாக பூரணை தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவரும் உள்ளடங்கவில்லை என்பது வெளிப்பட்டுள்ளது.
விசாக பூரணை தினமான இன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 240 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு தமிழ் கைதியும் உள்ளடங்கவில்லை என்பதை எமது செய்தி தளம் உறுதிப்படுத்தியது.
அதேநேரம், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இந்த பட்டியலில் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும் எமது செய்தி தளம் வினவியது. அதற்கு பதிலளித்த, றைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க சிறு குற்றங்கள் செய்தவர்களே விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.