மன்னார் மாவட்ட மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளார்.
41 வயதான கர்ப்பவதி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24ம் திகதி குறித்த பெண் குழந்தை பிரசவித்துள்ளார். இதனையடுத்து குழந்தைக்கு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.