கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை கருத்தில் கொண்டு தற்போது இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், தற்போது இலங்கையில் உள்ள இந்தியர்கள் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு கடல் பிரதேசங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து இந்தியர்களும் எல்லா சந்தர்ப்பங்களிலும், இலங்கை அரசாங்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கும்படியும் உயர் ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது.