சீனாவில் தயாரிக்கப்பட்ட 5 லட்சம் சைனோபார்ம் தப்பூசிகள் நேற்று இரவு செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசிகள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.869 விமானம் மூலம் பீஜிங்கிலிருந்து புறப்பட்டு செவ்வாய் நள்ளிரவு 12.20 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த 5 இலட்சம் தடுப்பூசிகளும் சீனாவினால் இரண்டாம் கட்டமாக அன்பளிப்பாக வழங்கப்படுபவையாகும். இதனை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான சீன தூதுவர், ‘ கொவிட் -19 ஒழிப்பிற்காக இலங்கைக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.’ என்று குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜங்க அமைச்சர் டி.வி.சாகன, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.