மேஷம்
நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். மாலை நேரத்தில் வரும் தொலைபேசி வழித்தகவல் மனக்குழப்பத்தை உருவாக்கும்.
ரிஷபம்
உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். புதியவர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். தொழில்மாற்றச் சிந்தனை உருவாகும்.
மிதுனம்
குழப்பங்கள் அதிகரிக்கும்நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஒரே நேரத்தில் பலவேலைகள் வந்து நெருக்கடியைக் கொடுக்கலாம். உறவினர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசலாம்.
சிம்மம்
எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். தேக நலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
கன்னி
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். வீடு வாங்க எடுத்த முயற்சி அனுகூலம் தரும். மாற்று இனத்தாரால் நல்ல தகவல் வரலாம்.
துலாம்
திறமைகள் பளிச்சிடும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். வரவேண்டிய பணத்தைப் பேசி வசூலிக்க முற்படுவீர்கள். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
விருச்சிகம்
யோகமான நாள். வரவு திருப்தி தரும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு
பாராட்டும் புகழும் கூடும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அகலும். பொதுவாழ்வில் பொறுப்புகள் வந்து சேரும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும்.
மகரம்
பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். உறவினர்கள் உங்கள்நலம் விசாரிக்க முற்படுவர். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். மதியத்திற்குமேல் ஆதாயம் தரும் தகவல் உண்டு.
கும்பம்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த வேலை தாமதப்படலாம்.
மீனம்
நட்பால் நன்மைகள் கிட்டும் நாள். நாள்பட்ட நோய் அகலும். பொதுவாழ்வில் பதவி வாய்ப்புகள்தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.